சபாநாயகரினால் பிரதமர் ஒருவரை நியமிக்க முடியாது எனவும் அவ்வாறு நியமிக்க முடியும் என்றால் அன்று நான் எனக்குத் தேவையான ஒருவரை பிரதமராக நியமித்திருக்க முடிந்திருக்கும் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்ற குழு அறையில் நேற்று (14) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
சபாநாயகர் நடுநிலையாகவும் சுயாதீனமாகவும் செயற்படவேண்டும். தான் எத்தகைய நிலைப்பாட்டுடன் சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்தாலும் எம்.பிக்கள் சொல்வதை செவிமடுத்து முடிவுகள் எடுப்பதே சபாநாயகரின் பொறுப்பாகும்.
ஆனால், சபாநாயகர் கரு ஜயசூரிய பக்கச்சார்பாக செயற்பட்டதாகவும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ குற்றம்சாட்டினார்.