வடமாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகள் தெற்கில் இனவாதம் தோன்றுவதற்கு வழிசமைக்கும் – மஹிந்த

347 0

25th_wigneswaran_2384794fவடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வீ.விக்கினேஸ்வரனின் நேற்றைய அறிக்கையானது நல்லிணக்கத்துக்கு தடை ஏற்படுத்தும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எனவே அவரது அறிக்கைக்கு கடுமையான எதிர்ப்பினையும் தெரிவிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நல்லாட்சியின் இன ஒற்றுமை நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் வடமாகாண சபை முதலமைச்சரின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவரது இந்த செயற்பாடுகள் தெற்கில் இனவாதம் தோன்றுவதற்கு வழிசமைப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.