சபாநாயகர் கருவின் கடிதத்திற்கு ஜனாதிபதியின் பதில்!

240 0

அரசியலமைப்புக்கு முரணான வகையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை மற்றும் அமைச்சரவை நியமனம் ஆகிவற்றுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை சபையில் நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசியலமைப்பு, நிலையியற் கட்டளை மற்றும் பாராளுமன்றத்தின் சம்பிரதாயங்களை பொருட்படுத்தாது சபாநாயகர் செயற்பட்டுள்ளதாகவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தினால் உரிய வகையில் உறுதிப்படுத்தப்படாத கையெழுத்திடப்பட்ட ஆவணமொன்றை தனக்கு அனுப்பி வைத்து குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக உறுதி செய்ய சபாநாயர் எடுத்த முயற்சி தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் ஜனாதிபதி அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment