மஹிந்த ராஜபக்ஷ சதிகாரர்களினால் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளார்-அனுர

294 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிந்தோ தெரியாமலே சதிகாரர்களின் பலிக்கடாவாக மாற்றப்பட்டுள்ளமை கவலைக்குரிய ஒன்றாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

சபையிலுள்ள எந்தவொருவரும் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு வாக்கெடுப்பொன்றைக் கூறவில்லை. சபையில் உறுப்பினர்கள் மோசமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது மஹிந்த ராஜபக்ஷ சபையிலிருந்து வெளியேறிச் சென்றார்.

மஹிந்த ராஜபக்ஷ என்னிடம் கூறினார் நான் செல்கின்றேன் என்று, நான் கூறினேன் நல்லது என. அவரும் சதிகாரர்களின் அலைக்கு அள்ளுப்பட்டு சென்றுள்ளார். இது உண்மையில் கவலைக்குரிய ஒன்றாகும் எனவும் அனுர குமார திஸாநாயக்க மேலும் கூறினார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Leave a comment