பொதுஜன பெரமுனவில் இணைந்தார் டில்ஷான்

288 0

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் அதிரடி துடுப்பாட்ட வீரருமான திலகரத்ன டில்ஷான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு சென்ற அவர் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் தேர்தலில் திலகரத்ன டில்ஷான் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment