முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் விசாரணைகள் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவர் ஆளுநராக பதவி வகித்த காலத்தில் மத்திய வங்கியில் இடம்பெற்ற மிகப்பெரிய அளவில் இடம்பெற்றுள்ள நிதி கொடுக்கல் வாங்கல் முறைகேடுகள் தொடர்பில் விரைவில் விசாரணைகள் முன்னெடுக்குமாறு ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கடிதம் மூலம் பிரதமரிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006 தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.