“பாராளுமன்றில் வாக்கெடுப்பு ஒன்றை அறிவிக்கும் போது அதற்கு பயந்து யாராவது வெளியேறுவார்களாயின் அவர்கள் ஜனநாயகத்திற்கு பயந்தவர்களாகவே அர்த்தப்படுவர்” என சஜித் பிரேம தாஸ தெரிவித்தார்.
பாராளுமன்றம் இன்று கூடி மஹிந்த தலைமையிலான அரசாங்கம் மீது நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்றம் தறகாலிகமாக நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்டடத்தினுள் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே சஜித் பிரேமதாஜ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து ஊடகவியலாள்ரகளின் கேள்விகளுக்க பதிலளித்த சஜித்,
“நாங்கள் எடுத்த அனைத்து முயற்சிக்கும் சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியது, சபையில் பேசி தீர்மானிப்போம், வாக்கெடுப்பிற்கு விடுவோம்;, ஜனநாயக ரீதியில் முன்னெடுப்போம் என ஆனால் பெரும்பான்மை இல்லாதவர்கள் இவை அனைத்தையும் முறியடிக்கும் விதமாகவே செயற்பட்டனர்.
பாராளுமன்றில் பெரும்பான்மை இருப்பது மக்களின் பெரும்பான்மையை பெற்ற அமைச்சர்களுக்கு ஆனால் அவர்களுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது சென்று விட்டது.
அதனால் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு பதிலாக அவர்கள் பலாத்காரத்தின் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சித்தனர்.
ஜனநாயக ஆட்சியை கொண்ட நாட்டில் பலாத்காரத்திற்கு இடம் இல்லை, செல்லுபடியாகாது
பாராளுமன்றில் வாக்கெடுப்பு ஒன்றை அறிவிக்கும் போது அதற்கு பயந்து யாராவது வெளியேறுவார்களாயின் அவர்கள் ஜனநாயகத்திற்கு பயந்தவர்களாகவே அர்த்தப்படுவர்.
இவை அனைத்து செயற்பாடுகளும்; நான் பொறுப்புடன் சொல்ல விரும்புவது அரசியலமைப்பிற்குட்பட்ட ஆட்சிக்கமையவும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கமையவும் நிலையியற் கட்டளைச்சட்டங்களுக்கமையவும் ஜனநாயகத்தை காப்பாற்ற மேற்கொண்டவை என்பதாகும்.
இறுதியில் பெரும்பான்மை வெற்றி பெற்றது.
தற்காலிகமாக பதவியேற்று, ஆட்சி எங்கள் கைகளில் என கூறியவர்களுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது சென்று விட்டது. இது தான் கசப்பான உண்மை. இது தான் சத்தியம்.
என் தலையில் இருக்கும் நோக்கம் பிரதமர் பதவி அல்ல மாறாக இந் நாட்டிலுள்ள அனைவரையும் ஒன்றாக திரட்டி நாட்டை அபிவிருத்தியடையச் செய்தலாகும்.
இங்கு யாருக்கும் தனியாக தீர்மானம் எடுக்க முடியாது. கட்சி, செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழு கூறும் எதுவாக இருந்தாலும் தலைசாய்ப்பேன். நான் ஏகாதிபதி அல்ல ஜனநாயக வாதி
எதிர்வரும் காலங்களில் நாம் அனைத்து செயற்பாடுகளையும் கட்டம் கட்டமாக தீர்மானம் மிக்கதாகவும் மனிதாபிமானத்தோடும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.”என nதிரிவித்தார்.