இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திலும் பாரிய ஊழல் மோசடி

326 0

50080இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் வாகனங்களை பதிவு செய்யும் போது பாரிய ஊழல் ஏற்பட்டுள்ளது தொடர்பாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

5494 வாகனங்கள் பதிவின் போது இவ்வாறு ஊழல் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளது தொடர்பில் அரச கணக்காய்வு குழு கடந்த வாரம் பாராளுமன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

குறித்த மோசடி சம்பந்தமாக பல அதிகாரிகள் இடமாற்றம் பெற்றுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கியதோடு நிறத்திக்கொள்ளாமல் அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அரச கணக்காய்வு குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த 5494 வாகனங்கள் பதிவு தொடர்பில் விவரமான அறிக்கை ஒன்றை விரைவாக பெற்றுத் தருமாரும் அரச கணக்காய்வு குழுவின் தலைவர் மோட்டார் வாகன போக்குவரத்து பிரதானியிடம் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை மோட்டார் திணைக்களத்தில் 597 வாகனங்களின் தகவல் உள்ளடங்கிய கோவைககள் காணாமல் போனமை தொடர்பிலும் அரச கணக்காய்வு குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

எனவே குறித்த சம்பவங்கள் தொடர்பில் விரைவான விசாரணைகள் முன்னெடுக்குமாறும் அரச கணக்காய்வு குழு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.