வலி.வடக்கு – கே.கே.எஸ் வீதி இராணுவச் சோதனைச்சாவடி அகற்றப்பட்டது (படங்கள் இணைப்பு)

3812 13

K800_IMG_2873வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக ஒரு சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கேசன்துறை வீதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவத்தின் சோதனைச்சாவடிகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.
இதன் போது இராணுவச் சோதனைச்சாவடியுடன் கூடியதாக காணப்பட்ட இராணுவத்தின் சிறிய படைமுகாங்களும் அங்கிருந்து அகற்றிச் செல்லப்பட்டுள்ளது.
இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் அகப்பட்டிருந்த 201.3 ஏக்கர் காணிகள் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக நேற்று முதல் விடுவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று விடுவிக்கப்பட்ட காணிகளை மக்கள் பார்வையிடுவதற்காக சென்றிருந்தனர். இதன் போது வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்காக மாவிட்ட புரத்திற்கு அருகில் காங்கேசன்துறை வீதியில் பாரிய அளவில் இராணுவத்தினர் அமைத்திருந்த சோதனைச்சாவடியினை அங்கிருந்து அகற்றிச் சென்றுள்ளனர்.
இனிவரும் காலங்களில் இராணுவத்தின் கெடுபிடிகள் இல்லாமல் பொது மக்கள் காங்கேசன்துறை ரயில் நிலையம்வரைக்கும் சென்று வரக்கூடிய நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

K800_IMG_2802 K800_IMG_2807 K800_IMG_2813

Leave a comment