ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படை தாக்குதலில் 9 பேர் பலி

319 0

201609260703554671_raids-kill-nine-in-central-yemen_secvpfமத்திய ஏமனின் இப் நகரில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய கடுமையான வான் தாக்குதலில் 9 பேர் பலியாகினர்.ஏமன் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு தருகிறது. அதே நேரத்தில், ஏமன் அதிபருக்கு ஆதரவாகவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் சவுதி கூட்டுப்படைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சண்டையிட்டு வருகின்றன. இந்த சண்டையில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லபட்டு விட்டனர்.
அங்கு சண்டை நிறுத்தம் செய்வது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை சமீபத்தில் முறிந்து போன நிலையில் தற்போது மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் அங்கு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள மத்திய ஏமனின் இப் நகரில் சவுதி கூட்டுப்படைகள் நேற்று முன்தினம் கடுமையான வான் தாக்குதலில் ஈடுபட்டன. இந்த தாக்குதலில் 9 பேர் பலியாகினர். அவர்களில் 3 பேர் குழந்தைகள், 6 பேர் அவர்களின் பெற்றோர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 9 பேர் படுகாயமும் அடைந்தனர்.