பாரிமுனையில் தனியார் பார்சல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பாரிமுனை மண்ணடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பார்சல் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கிருந்து மும்பை உள்பட நகரங்களுக்கு பார்சல் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மும்பையில் இருந்து டிராவல்ஸ் மூலம் அனுப்பப்பட்ட பொருட்கள் நேற்று இந்த நிறுவனத்தில் இறக்கி வைக்கப்பட்டது.
அந்த அறையில் திடீரென்று மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அறையில் உள்ள பொருட்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன.
தகவல் அறிந்து வண்ணாரப்பேட்டை, ஐஸ்அவுசில் இருந்து 2 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்து விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.