தேர்தல் செலவுக்கு ரூ.183 கோடி ஒதுக்கீடு

437 0

201609260859337002_election-cost-of-of-rs-183-crore-election-regulations-came_secvpfஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதாக மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதாக மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் தெரிவித்தார். அதன்படி, தமிழக அரசு புதிய திட்டங்களை செயல்படுத்த முடியாது. ரேஷன் கார்டு குறைதீர்ப்பு முகாம்கள் போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்த முடியாது.

மேலும் தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் பதவி வகித்து வரும் தலைவர்கள், உறுப்பினர்கள் தங்கள் அலுவலகங்கள், அரசு வாகனங்களை பயன்படுத்த முடியாது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் ரூ.183 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இதில் ரூ.107 கோடி அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.