உண்ணாவிரதம் இருந்தது தப்பா ?

348 0

%e0%ae%85%e0%ae%a8%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d2-1-450x270உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த 17 தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர் அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து போகம்பரை சிறைச்சாலைக்கு நேற்று இடம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கண்டி நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணை நடைபெறவுள்ளமையினால்தான் குறித்த தமிழ் அரசியல் கைதி போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தொடர்ந்தும் அநுராதபுர சிறைச்சாலையில் ஏனைய 16 தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கான விசாரணைகளை துரிதப்படுத்தி உரிய முறையில் தீர்வினை பெற்றுத்தருமாறு வலியுறுத்தியே கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் குறித்த கைதிகள் 17 பேரும் கடந்த 21 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.