ரணிலுடன் பேரம் பேசிய மஹிந்த தரப்பு

349 0

mahinda-amaraweera-720x480ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் மஹிந்த தரப்பின்முக்கிய எம்பிக்கள் இருவர் காய்நகர்த்தினர் என்றும், அக்கட்சிக்கு ஆதரவுவழங்குவதற்காக 11 அமைச்சுக்களைக் கேட்டு அவர்கள் பேரம் பேசினர் என்றும்அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,தேசிய அரசையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் மஹிந்த தரப்பினர் எதிர்த்துவருகின்றனர். தேசிய அரசின் உருவாக்கத்தைத் தடுப்பதற்கு முயற்சித்தவர்களேமஹிந்த தரப்பில் இருக்கும் இரண்டு முக்கியஸ்தர்கள்தான்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களையும்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 95 ஆசனங்களையும் பெற்றன.

இதில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்ற போதிலும், அக்கட்சியால் தனித்து ஆட்சி அமைக்க முடியாமல்போனது.இருந்தாலும், ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைப்பதற்கு மஹிந்த தரப்பின்அந்த முக்கியஸ்தர்கள் இருவரும் கைகொடுக்க முன்வந்தனர்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் ஆறும், இராஜாங்க அமைச்சுக்கள் இரண்டும்,பிரதி அமைச்சுக்கள் மூன்றும் தந்தால் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சிஅமைப்பதற்கு ஆதரவு தருவோம் என்று அந்த இருவரும் கூறி அக்கட்சியுடன் பேச்சுநடத்தினர்.

அந்த முயற்சி வெற்றியளிக்காததால் இப்போது தேசிய அரசை அவர்கள் குறைகூறுகின்றனர். தேசிய அரசில் அதிருப்தியடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள்பலர் அமைச்சுப் பதவிகளை இராஜிநாமா செய்துவிட்டு கூட்டு எதிர்க்கட்சியில்அதாவது மஹிந்த தரப்பில் இணையப் போவதாக அவர்களே கூறி வருகின்றனர்.

அப்படியான சம்பவம் எதுவும் நடக்காது. தேசிய அரசு தொடர்பில் நாம் அனைவரும்திருப்தியடைகின்றோம். மஹிந்த தரப்பில் இருப்பவர்களுள் அதிகமானவர்கள் இன்னும்ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நேசிப்பவர்கள். அங்கிருந்து இங்கு வருவார்களேதவிர இங்கிருந்து அங்கு செல்லமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.