எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன்இணைந்து போட்டியிடுவதற்கு 14 கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன என்று சு.க.வட்டாரம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன என்றும் அறியக் கிடைக்கின்றது. இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தோற்கடிக்கும் வகையில்மஹிந்த தரப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
புதிய கட்சி ஒன்றைஉருவாக்கி அந்தக் கட்சியை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறக்குவதற்கும்அக்கட்சியை சுதந்திரக் கட்சிக்கு சவாலான கட்சியாக மாற்றுவதற்கும் மஹிந்ததரப்பு முயற்சி செய்து வருவதால் அந்த முயற்சியை முறியடிக்கும் வகையில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி வியூகங்களை வகுத்துவருகின்றது.
மஹிந்தவுக்கு ஆதரவான தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை நீக்கிமைத்திரிபாலவுக்கு விசுவாசமான அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுக் கொண்டுவருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து பல கட்சிகளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு தேர்தலில் வெற்றிபெறுவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார்.
அந்தவகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல கட்சிகளுடன் பேச்சுக்களைத்தொடங்கி இருப்பதாகவும், முதல்கட்டப் பேச்சைத் தொடர்ந்து சு.கவுடன் இணைந்துசெயற்படுவதற்கு 14 கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சுதந்திரக் கட்சிவட்டாரம் தெரிவிக்கின்றது.
மறுபுறம், மஹிந்த தரப்பும் அவர்கள் பக்கம் பல கட்சிகளை இணைப்பதற்கான வேலைகளில்ஈடுபட்டு வருகின்றமையும் தெரியவருகின்றது.
தேர்தலில் வெற்றி பெரும் நோக்கில் ஓய்வுபெற்ற இராணு அதிகாரிகளைக் களமிறக்குதல்உள்ளிட்ட பல வியூகங்களை மஹிந்த தரப்பு வகுத்து வருகின்றது.
சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இப்போதுநான்கு காட்சிகள் இணைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இனி வரும் அனைத்துத்தேர்தலிலும் சுதந்திரக் கட்சியின் ‘கை’ சின்னத்தில் போட்டியிடுவதென்றுஅக்கட்சி முடிவெடுத்துள்ளது. இதற்கு கூட்டணிக் கட்சிகள் இணக்கம் தெரிவித்தால்மாத்திரமே அம்முடிவு இறுதி முடிவாக அமையும் என்று தெரிவிக்கப்படுகின்றது.