கடந்த நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மழை வீழ்ச்சியால் எமது உறவுகள் கடும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.
மட்டக்களப்பு – பாசிக்குடா பகுதியில் 342.3 மில்லிமீட்டர் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.கடும் மழையையடுத்து, வாகரை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு வாகரை – ஊரியன்கட்டு கிராம சேவகர் பிரிவில் மூன்று முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.382 குடும்பங்களைச் சேர்ந்த 1244 பேர் இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான முதலாம் கட்ட அவசர உதவியாக நான்கு லெட்சம் பெறுமதியான உலர்உணவுப்பொருட்கள் பேர்லின் அம்மா உணவகத்தின் அனுசரணையில் இன்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் திரு சுரேஷ் தர்மலிங்கம் அவர்களின் தலைமையில் பணியாளர்களின் மாபெரும் உதவிகளுடனும் விநியோகிக்கப்பட்டது.
போரினால் மட்டும் அல்ல இயற்கை அனர்த்தத்தாலும் எமது மக்கள் வருந்துவது இது முதல் தடவை அல்ல.ஆனால் எமது மக்களை எப்படி எமது தேசியத்தலைவர் தொண்டர் அமைப்புகளின் ஊடாக பராமரித்தாரோ அந்த வரலாற்றை இன்றைய தினம் மக்களோடு மக்களாக நின்று அவர்களுக்கான உதவிகளை செய்த பணியாளர்கள் மீள்நினைவுப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.