இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனவரி 5ஆம் திகதி தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாராளுமன்றத்தைக் கலைக்கும் உத்தியோகப்பூர்வ வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார். இத்தகவலை இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உறுதிப்படுத்தினார். நாடுமுழுவது பதட்டத்திலும் பரபரப்பிலும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்தி சேவைநிலையமொன்று அறிவித்துள்ளது.நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவு வர்த்தமானியில் மைத்திரி ஒப்பமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே ஏற்கனவே தான் தெரிவித்திருந்தது போல் பூரணை தினத்திற்கு முன்னதாக அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் தனது தீர்மானம் சரியானதா என நாடாளுமன்றத்தில் அல்ல மக்களிடமே வினவ வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் ‘ஏன் உங்களுக்கு 8 அல்லது 6 மாதங்கள் பொறுமையாக இருக்க முடியவில்லை என வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் என்னிடம் கேட்டனர். பொறுமையாக இருந்திருந்தால் 8 மாதங்களில் இலங்கையில் மீதமாவது என்ன என்பது தொடர்பில் பிரச்சினையுள்ளது. அனைத்தையும் பட்டியலிட்டு விற்பனை செய்யும் திட்டத்தில் அரசாங்கம் இருந்தது’ எனவும் தெரிவித்துள்ளார்.