சர்வதேச நாடுகள் தெரிவிப்பதற்காக எங்களுக்கு சட்டத்தை மீறி செயற்படமுடியாது. நாட்டு சட்டத்தின் பிரகாரமே பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் என கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
எமது நாடு சுயாதீன நாடாகும். யாரும் தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக சட்டத்தை மீறி செயற்படமுடியாது.
அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறும்.
புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டிருப்பதால் அவை வர்த்தமானியில் இடப்பெற்ற பின்னரே பாராளுமன்றத்தில் அதற்கேற்றவிதத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்படும்.
அத்துடன் வரவு செலவு திட்டம் தயாரிக்கப்படவேண்டும். அதற்காகத்தான் ஜனாதிபதி பாராளுமன்றத்தை குறிப்பிட்டதொரு தினத்துக்கு ஒத்திவைத்திருக்கின்றார்.
இது சாதாரண சம்பிரதாயமாகும்.இதற்கு முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.