ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்தும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை தனித் தனியாக பிரித்தெடுப்பது ஒன்றும் சிரமமான காரியமல்ல எனவும், அவர்கள் கூட்டாக தீர்மானம் எடுக்க இருப்பதனால் அதில் தாம் கை வைக்கவில்லையெனவும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
எம்மை நிர்ப்பந்தத்தில் தள்ளினால் நாம் தின நபர்கள் மீது கைவைப்போம். அதுதொடர்பில் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.