இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் சமீபத்தில் வெளியிட்ட கருத்திற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவரிற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச தனது டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்
அனைத்து அரசியல்தலைவர்களும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் பாடுபடவேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் விதத்தில் முரளீதரனின் கருத்து அமைந்துள்ளது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முரளீதரன் நீங்கள் எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றீர்கள் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வு அவசியம் என தெரிவித்து வருகின்றர் எனினும் அவ்வாறான தீர்வொன்று தேவையா என முரளீதரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
நாட்டின் பெரும்பான்மை மக்கள் அரசியல்வாதிகளிடம் கேட்பது ஜனநாயகத்தையோ அல்லது உரிமைகளையோ இல்லை மூன்று வேளை உணவு உண்பதற்கும் தமது பிள்ளைகளிற்கு சிறந்த கல்வியை பெற்றுத்தருவதற்குமான பொருளாதார அபிவிருத்தியையுமே கேட்கி;ன்றனர் என முத்தையா முரளீதரன் தெரிவித்திருந்தார்.