பாராளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதி கூடும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை உறுதியாக உள்ளதா என்பது தொடர்பில் ஆராயவேண்டும். அத்துடன் யாப்பின் 38 ஆம் உறுப்புரையை மீறி இருப்பாரானால் ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹரின் பெர்ணான்டோ, மஹிந்தவிற்கு பெரும்பான்மை இருக்குமானால் 14 ஆம் திகதி வரை காத்திருக்காமல் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் சுட்டிகாட்டினார்.
அலரிமாளிகையில் ஐக்கிய தேசிய கட்சி இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.