அமெரிக்காவின் அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த ஜெஃப் செஸ்ஸன்ஸ் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையை ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது அமைச்சரவை மற்றும் அரசின் முக்கிய பொறுப்புகளில் ஒரு வாரத்துக்குள் சில மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவித்து இருந்தார். அதன் முதல் எதிரொலியாக, அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்து வந்த ஜெஃப் செஸ்ஸன்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெஃப்பின் சேவைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது உடல்நலமுடன் வாழ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தலைமை வழக்கறிஞர் பதவிக்கு விரைவில் மேத்யூ ஜி விடாகெர் நியமனம் செய்யப்பட உள்ளார் எனவும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.