உலக குடியிருப்பு தினம் அடுத்த மாதம் 3ஆம் திகதி

325 0

kudijiruppu-thinam

உலக குடியிருப்பு தினம் அடுத்த மாதம் 3ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. உலக குடியிருப்பு தினத்தின் பிரதான வைபவம் பொலன்னறுவையில் நடைபெறவுள்ளது. உலக குடியிருப்பு தின வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

 
வீடுகளுக்கு முதலிடம் என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அத்துடன் திம்புலாகல சூகலாதேவி மாதிரிக்கிராமம் இன்றைய தினம் மக்களிடம் கையளிக்கப்படும்.
இன்று முதல் ஒரு வார காலத்திற்கு நாடளாவிய ரீதியில் பல்வேறு வீடமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக் விஜய சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.

 
முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாச பிரதமராக இருந்த காலத்தில் 1986ம் ஆண்டு முன்வைத்த பிரேரணைக்கு அமைய ஐக்கிய நாடுகள் சபை உலக குடியிருப்பு தினத்தை பிரகடனம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
குறைந்த வருமானம் பெறும் மக்களின் வீட்டுக் கனவை நனவாக்குவதற்காக ரணசிங்க பிரேமதாச நடைமுறைப்படுத்திய சாத்தியமிக்க வேலைத்திட்டங்களுக்கு வழங்கும் கௌரவமாக ஐக்கிய நாடுகள் சபை அந்தத் தினத்தைப் பிரகடனம் செய்தது.

 
20 வருடங்களின் பின்னர், பிரேமதாசவின் புதல்வரும் தற்போதைய வீடமைப்பு அமைச்சருமான சஜித் பிரேமதாச 2025ம் ஆண்டிற்குள் நாட்டில் வீட்டுத் தேவையுள்ள அனைவருக்கும் வீடுகளைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருப்பதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக் விஜய சாகர பலன்சூரிய குறிப்பிட்டார்.