ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக கலாஓயாவின் நீர் மட்டம் அதிகரிக்க கூடும் என நீர்பாசன பொறியியலார்கள் தெரிவித்துள்ளனர்.
வனாதவில்லு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் தெதுறு ஓயா மற்றும் தப்போவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மத்திய மலை நாட்டில் அதிக மழை வீழ்ச்சி இடம்பெறுவதனால் விக்டோரிய நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.