சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை மாணிக்க கற்களை மலேசியாவிற்கு எடுத்துச் செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருவளை பகுதியை சேர்ந்த 43 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (07) மதியம் 12.40 மணிக்கு கோலாலம்பூர் நோக்கி பயணிக்கவிருந்த ஶ்ரீலங்கள் விமான சேவைக்கு சொந்தமான UL 318 என்ற விமானத்தின் மூலம் பயணத்தை மேற்கொள்வதற்காகவே குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 298 கெரட் எடையுடைய 1,546,510 ரூபா பெறுமதியான மாணிக்க கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.