சட்ட ரீதியாக கூடவுள்ள பாராளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தாக்கல் செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 14 ஆம் திகதி சட்டரீதியாக கூடவுள்ள பாராளுமன்றத்தில் ஜனாதிபதியினால் புதிய கொள்கைப் பிரகடணம் வாசிக்கப்பட உள்ளது. அதன்பின்னர் பாராளுமன்றம் ஒரு நாளைக்கு பிற்போடப்பட உள்ளது.
14 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்றத்தில் முதல் நாளன்று பெரும்பான்மையை அரசாங்கம் நிருபிக்க தேவையில்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.