அமைச்சரவைக்கான அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளும் பணிகள் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் நிறைவடையும் என்று அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கான வர்த்தமானி அறிப்பு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும், அதனடிப்படையில் பாராளுமன்றத்தில் ஆசன ஒதுக்கீட்டு நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் அவர் இன்று நடைபெற்ற அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.