பஸ்கள் சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு இடையில் இன்று (07) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.
பஸ் கட்டணத்தை குறைப்பது உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கு இரண்டு வீதத்தால் பஸ் கட்டணத்தை குறைப்பது சம்பந்தமாக யோசனை ஒன்று முன்வைக்கப்பட உள்ளதாக அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.