முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வேறொரு கட்சியை ஸ்தாபிப்பாராக இருந்தால், எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை தவிர்க்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
புதிய கட்சியொன்று ஸ்தாபிக்கப்படும் பட்சத்தில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாக பிளவுப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், சவாலை ஏற்றுக் கொண்டு கட்சியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என துமிந்த திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.