நாட்டிற்கு புதிய அரசியலமைப்பொன்று அவசியமில்லையென்பதே தமது நிலைப்பாடென தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அரசாங்கம் அவசர அவசரமாக அரசியலமைப்பை உருவாக்குவது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அன்று சிரேஸ்ட அரசியல்வாதியும் சட்டத்தரணியுமான கொல்வின் ஆர்.டி.சில்வாவுக்கு புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு மூன்று வருடங்கள் சென்றிருந்ததாக குறிப்பிட்டுள்ள மஹிந்த, தற்போதைய அரசாங்கம் ஆறு மாதத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதே தமது சந்தேகத்திற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்று வடக்கில் இடம்பெற்ற பேரணி குறித்து கருத்துத் தெரிவித்த மஹிந்த, அங்கு நடைபெறும் விடயங்களை முழுமையாக வெளியிடுவதற்கு ஊடகங்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், இதுகுறித்து மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.