இலங்கை போன்ற நீண்டகால யுத்தத்திற்கு முகங்கொடுத்த நாடுகள் இயல்பு நிலையை அடைவதற்கு, உலகின் சக்திமிக்க நாடுகள் உதவவேண்டுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அந்நாடுகளுக்கான நிதியுதவிகளை அதிகரிக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐ.நா செயலாளர் நாயகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான நிதியம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சமாதானத்தை கட்டியெழுப்புதல் தொடர்பில் இலங்கை கடந்த 2015ஆம் ஆண்டுமுதல் தீவிரமாக செயற்பட்டு வருவதாக அமைச்சர் மங்கள இதன்போது குறிப்பிட்டார்.