நாளைய தினம் (05) வடமாகாண பாடசாலைகளிற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுனர் இதற்கான உத்தரவை கல்வியமைச்சின் செயலாளருக்கு விடுத்துள்ளார்.
தீபாவளி திருநாள் பண்டிகையை முன்னிட்டு வடமாகாண மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் இந்த விடுமுறையை வழங்குமாறும், எதிர்வரும் சனிக்கிழமை (10) பாடசாலையை நடத்தி, அந்த விடுமுறையை சரிசெய்து கொள்ளுமாறும் கல்வியமைச்சின் செயலாளருக்கு ஆளுனர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிற்கும் இன்று அறிவித்தல் வழங்குமாறும் கேட்டுள்ளார்“ என ஆளுனர் செயலகம் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியமளவில் ஆளுனர் செயலகம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. நாளைய விடுமுறை அறிவித்தலை இன்று மதியத்தின் பின் வெளியிட்டால், மாணவர்களிடம் அது சென்று சேருமா தெரியவில்லையென கல்வியமைச்சின் மூத்த அதிகாரியொருவர் தமிழ்பக்கத்திடம் விசனம் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபையின் பதவிக்காலம் முடிவடைந்ததும், வடக்கு கல்வியமைச்சிற்கு சென்ற ஆளுனர், இனி வினைத்திறனாக செயற்பட தயாராகுங்கள் என அதிகாரிகளிற்கு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.