நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் என்கிறார் பீரிஸ்

233 0

ஐக்கிய தேசியக் கட்சியினரால் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் என தெரிவித்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், எதிர் தரப்பினரின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் பலம் தற்போது எம்மிடம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

 

மேலும் சபாநாயகருக்கு தன் அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை ஒருபோதும் கூட்ட முடியாது எனவும் மேற்குலக நாடுகளின் தேவைகளுக்காக புதிய அரசியலமைப்பு ஒரு போதும் உருவாகாது. அவ்வாறு புதிய அரசியலமைப்பு உருவாக வேண்டுமாயின் அது நாட்டை பிளவுபடுத்தாத அரசியலமைப்பாக மாத்திரமே உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்ரைத்த போதே அவர் மேற்கண்மடவாறு  குறிப்பிட்டார்.

Leave a comment