அமைச்சுப் பதவியை காட்டி என்னை அழைக்கின்றனர் – பியதாஸ

221 0

நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் காரணமாக புதிய பிரதமாராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கட்டவுடன் புதிய அரசாங்கத்தோடு வந்து இணைந்து கொண்டால் அமைச்சுப் பதவி தருவதாக எனக்கு அழைப்பு விடுக்கின்றனர் என ஜக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.பியதாஸ தெரிவித்தார்.

ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த ஆர்பாட்டதில் ஜக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பலர கலந்து கொண்டனர்.

நாட்டில் இன்று திடீர் என பிரதமரை மாற்றி புதிய பிரதமராக முன்னான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்த நாட்டின் ஜனாதிபதி நியமித்துள்ளார்.

ஆனால் மஹிந்த அணியினர் பாராளுமன்றில் பெறும்பான்மையை நிரூபித்து காட்டுவதற்காக என்னையும் அழைத்து கூறினார்கள் உங்களுக்கு அமைச்சு பதவி தருகிறேன் பெருந்தொகையான நிதி தருகின்றேன். மஹிந்த ராஷபக்ஷவுக்கு ஆதரவு வழங்குமாறும் எனக்கு அழைப்பு விடுத்தனர்.

இந் நிலையில் பாராளுமன்றத்திலே அநேகமான உறுப்பினர்கள் எங்களின் பக்கமே இருக்கிறார். ஆகையால் பாராளுமன்றம் கூடிய பிறகு ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மையை காட்டுவார் என்றார்.

Leave a comment