மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டபோது இருவருக்கும் இருவருக்கும் வாக்களிக்கவேண்டாம் என கூறியதற்காக தமிழரசுக் கட்சி என்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தது. நான் அன்று புறக்கணிக்கக்கோரியதன் அர்த்தம் இப்போது புரிகிறதா எனத் தெரிவித்திருக்கும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் தற்போது மகிந்த அணிக்கு தாவியிருக்கும் வியாழேந்திரன் எம்.பிக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது தொடர்பில் அனந்தி சசிதரன் வெளியிட்ட அறிக்கை வருமாறு,
செயலாளர் தமிழரசு கட்சி
உங்களுடைய கட்சி உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள் இன்று பிரதி அமைச்சராக பதவியேற்றதை அறிந்து கொண்டமை மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி கொண்டது இது தொடர்பாக தங்களது கட்சியின் ஒழுக்கற்று நடவடிக்கை என்ன என்பதை நானும் எமது மக்களும் அறிய ஆவலாக உள்ளோம் அவரது உறுப்புரிமையை நீக்க போகின்றீர்களா அல்லது ஒருவர் பின் ஒருவராக சென்று மண்டியிட போகின்றீர்களா அறிய ஆவலாக உள்ளேன்.
2015 ம் ஆண்டு ஜனாதிபதி பொது தேர்தலின் போது நான் மைத்திரி மற்றும் மகிந்த இருவருக்கும் வாக்களிக்கவேண்டாம் என்று கூறியமைக்கு தங்களுக்கு தற்சமயம் அர்த்தம் புரிகின்றதா நான் அவ்வாறு கூறியமைக்கான காரணம் எங்களது பிரச்சினையில் சர்வதேசம் தலையீடு செய்து உரிமைகளை பெற்று தரவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு கூறினேன் அதன் பின்னர் என் மீது ஒழுக்காற்று நடவடிகக்கை எடுத்தீர்கள் அதன் பின் இடம்பெற்ற கட்சி கூட்டங்களுக்கு என்னை அழைப்பதில்லை தற்சமயம் வியாழேந்திரனது நடவடிக்கைக்கு கட்சி நடவடிக்கை எடுக்குமா இல்லை என்றால் ஒன்றன் பின் ஒருவராக சொல்வதற்க்கு வியாழேந்திரன் உங்களால் பதவியினை பெற முன் அனுப்பு வைக்கபட்டவரா?
உங்களது கட்சி உறுப்பினர்கள் அடிக்கடி சொல் ஒரு வார்த்தை எங்கட சனம் மறந்திடும் என்றுள்ளது.