அத்துமீறி உட்புகுந்தோருக்கு எதிராக பொலிஸில் முறைபாடு – ஹட்டனில் சம்பவம்

238 0

ஹட்டன் -டிக்கோயா புளியாவத்த நியுட்டன் தோட்டபகுதியில் புணரமைக்கபட்ட  20 தனிவீட்டு திட்டத்திற்குள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் அத்து மீறி உட்புகுந்துள்ளமையால் நியுட்டன் தோட்ட முகாமையாளர் நோர்வுட் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த அரசாங்கத்தின் போது மலைநாட்டில் புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மனிதவள அபிவிருத்தி ஸ்தாபனத்தின் ஊடாக நோர்வுட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட  டிக்கோயா புளியாவத்த நியுட்டன் தோட்டபகுதியில் புணரமைக்கபட்ட  20 தனிவீட்டு திட்டத்திற்குள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் அத்து மீறி உட்புகுந்துள்ளமையால் நியுட்டன் தோட்ட முகாமையாளர் நோர்வுட் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த முறைபாடு நேற்று மாலை பதிவு செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட  உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் நிதிஒதுக்கப்பட்ட  இந்த 20 தனி வீட்டுத்திட்டமும் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதி ஒதுக்கீட்டில் ஏழு பேச்சர்ஸ் காணியின் மூலமாக இந்த வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் கடந்த 26 ஆம் திகதி நாட்டில் ஏற்றபட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக குறித்த வீடமைப்பு திட்டங்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதராவளர்கள் வசம் போய்விடும் என்ற பயத்தில் குறித்த தோட்டபகுதியை சேர்ந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர் அத்துமீறி உட்புகுந்துள்ளதாக நோர்வுட் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த வீடமைப்பு திட்டத்திற்காக எங்கள் சொந்தபணத்தையும் நாங்கள் செலவு செய்திருக்கின்றோம் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் காரணமாக இந்த வீடமைப்பு திட்டங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கமுடியாது ஆகவேதான் நாங்கள் இவ்வாறான ஒரு முடிவை மேற்கொண்டதாக வீடமைப்பு திட்டத்திற்குள் உட்புகுந்த மக்கள் தெரிவித்துள்ளதாக மக்களிடம் இருந்து பொலிஸாரினால் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

எனவே சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் இது தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a comment