பிரதமர் மஹிந்த ராஜபக்ஷசுக்கு எதிராக ஐ.தே.க.வினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை நேற்று சபாநாயகரிடம் கையளித்தது.
குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கையெழுத்திட்டு சபாநாயகரிடம் நேற்று கையளிக்கப்பட்ட நிலையில் பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் போது குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமென சபாநாயகர் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளதனையடுத்து அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.