தமிழரசுக் கட்சி ஒன்றும் சுமந்தரனின் காபரேட் நிறுவனமல்ல!

338 0
தனி நபர் சர்வாதிகாரத்தில் இருந்து தமிழரசுக் கட்சியையும் கூட்டமைபையும் காப்பாற்றுங்கள்.
.
சம்பந்தர் ஐயாவுக்கு பணிவான வேண்டுகோள்.
1970பதுகளில் திருசெலவம் போன்றவர்கள் செல்வநாயகத்தின் முதுமையை பயன்படுத்தி உள்நோக்கங்களுடன் தமிழரசுகட்சியை கைபற்றினார்கள். அவர்கள் காலம்காலமாகக் கட்ச்சியை வளர்த்த விசுவாசிகளை வெளியேறச் செய்தனர். கட்ச்சியை வலுவிளக்க செய்தார்கள். இது இளைஞர்களின் விரக்திக்கு வழிவகுத்தது.

.
வரலாறு தெரிந்த நீங்களே அத்தகைய ஒரு சூழலுக்கு வழிவகுக்கலாமா? இன்று உருவாகும் கட்ச்சித் தாவல்களுக்கு சுமந்திரனின் நடவடிக்கைகள்தான் காரணம். தயவுசெய்து சுமந்திரனை கட்டுபடுத்தி கட்சியை காப்பாற்றுங்கள். கட்சியில் பின்தள்ளப்பட்டுள்ள வடகிழக்கைச் சேர்ந்த கட்சி விசுவாசிகளை முன்னிலைப் படுத்தி கட்சியை மீண்டும் பலப்படுத்துங்கள்.
.
உங்கள் வயோதிபத்தை பயன்படுத்தி உங்களைச் சூழல் கைதியாக்கியுள்ள சுமந்திரன் யார்? அவரது உள்நோக்கங்கள் என்ன என்பவை யாருக்கும் புரியவில்லை. ரணிலா மகிந்தவா என்பதைவிட கட்சியா கூட்டமைப்பா அல்லது சுமந்திரனா என்பதுதான் வடகிழக்கு தமிழர்களின் இன்றைய தலையாய பிரச்சினையாகி உள்ளது. இதனை உணருங்கள்.
.
உருவாகிவரும் கட்சித் தாவவல் போன்ற தமிழரசுக் கட்சியின் கூட்டமைப்பின் சீர்குலைவுச் சூழலுக்கு கட்சியில் கூட்டமைப்பில் ஜனநாயகமற்றுப் போனதே முக்கிய காரணமாகும். கட்சி கூட்டமைப்பு சீர்குலையும் சூழலை தடுத்து நிறுத்துவதே உங்கள் முன்னுள்ள முதல் கடமையாகும்.
.
ரணிலா மகிந்தவா என்பதைவிட கட்சியா/கூட்டமைப்பா அல்லது தனிநபர்களா என்கிற முடிவை நீங்கள் உடனடியாக எடுக்கவேண்டுமென வலியுறுத்துகிறேன். சுமந்திரன் கொடுக்கும் பணிகளை கட்சி /கூட்டமைப்பு செய்வதில் இருந்து கட்ச்சி கொடுக்கும் பணிகளை மட்டும் சுமந்திரனும் ஏனைய கட்ச்சி உறுப்பினர்களும் செய்கிற சூழல் உருவாக்கப்படவேண்டும்.
.
செல்வநாயகம் அவர்கள் காலத்தைபோல அதிகார பரவலாக்கமுள்ள கட்சிக் கிழைகள்மூலம் மக்கள் மீண்டும் அதிகார மயப்படுத்தப்பட வேண்டும்.
.
தமிழரசுக் கட்சி ஒன்றும் சுமந்தரனின் காபரேட் நிறுவனமல்ல. சுமந்திரனின் தவறுகளால் கட்சியில் இருந்து வெளியேறிய வியாழேந்திரன் போன்றவர்கள்மீது நடவடிக்கை எடுக்கிறதில் காட்டுகிற அவசரத்தை தனி நபர்களிடமிருந்து கட்ச்சியைக் காப்பாற்றுவதில் காட்டவேண்டுமென்று தமிழரசுக் கட்சியிடமும் கூட்டமைபிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
.
கட்சிக் கிளைகள் மூலம் வடகிழக்கு மக்களை அதிகாரமயபடுத்துக என்பதே இன்றைய அவசரத் தேவையாகும். வடகிழக்கிலும் உலகளாவியும் வாழும் தமிழர்களே இதனை உரத்து சொல்லுங்கள்.
வ.ஐ.ச. ஜெயபாலன்

Leave a comment