திண்டுக்கல்லில் பா.ஜனதா அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

300 0

201609251057078719_petrol-bomb-through-at-the-bjp-office-in-dindigul_secvpfதிண்டுக்கல்லில் இன்று பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதட்டம் நிலவுகிறது.திண்டுக்கல்லில் இன்று பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதட்டம் நிலவுகிறது.

திண்டுக்கல் கரூர் ரெயில்வே கேட் வழிவிடும் விநாயகர் கோவில் அருகே பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு முக்கிய கூட்டம் மற்றும் கட்சி பணிகள் குறித்து நிர்வாகிகள் அடிக்கடி ஆலோசித்து வருகிறார்கள்.

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் கடந்த சில நாட்களாக நிர்வாகிகளிடையே விருப்ப மனு வாங்கப்பட்டு வருகிறது. இன்று காலை மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினர். அது திடீரென வெடித்து தீ பிளம்மாக சிதறியதது.

அலுவலகம் இருக்கும் இடம் முக்கியமான பகுதியாகும். இந்த பகுதியில் அரிசி கடை மற்றும் சாமியான பந்தல் கடை, டிரைவிங் பயிற்சி பள்ளி ஆகியவை உள்ளன. திடீரென அந்த பகுதியில் தீபிளம்பு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். இவர்களை பார்த்ததும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் திரண்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் திண்டுக்கல் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தடய நிபுணர்களும் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டை வீசி சென்ற மர்ம நபர்கள் யார்? எதற்காக வீசி சென்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் பதட்டம் நிலவி உள்ளதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.