சரவெடிகளை வெடிக்க வேண்டாம் – தமிழக அரசு அறிவுறுத்தல்

281 0

தீபாவளி நாளில் பட்டாசுகள் வெடிப்பது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ள தமிழக அரசு, தொடர்ந்து வெடிக்கும் சரவெடிகளை வெடிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த 2 மணி நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும் கூறியிருந்தது. அதன்படி, இன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு அறிவித்தது. காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என கூறியுள்ளது.

மேலும், வெடி வெடிப்பதற்கான பல்வேறு அறிவுறுத்தல்களையும் தமிழக அரசு வழங்கி உள்ளது. அவை வருமாறு:-

• அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்

• குறைந்த ஒலி எழுப்பும், குறைந்த அளவில் மாசுபடுதல் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும்

• மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்

• குடிசைப் பகுதி மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் வெடி வெடிப்பதை தவிர்க்க வேண்டும்

• உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற்று திறந்தவெளியில் மக்கள் ஒன்றுகூடி கூட்டாக வெடி வெடிக்கலாம்

• திறந்த வெளியில் கூட்டாக வெடி வெடிப்பற்கு அந்தந்த பகுதியில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்.

Leave a comment