அதிமுக பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பாக டிடிவி தினகரன் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் கடந்த 30-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அவர்களை வரவேற்று, வாழ்த்தி அதிமுக நிர்வாகிகள், ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் மற்றும் பதாகைகளை வைத்திருந்தனர்.
அதன்பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அங்கு அஞ்சலி செலுத்த வந்தபோது, அங்கு கூடியிருந்தவர்கள், அதிமுகவினர் வைத்திருந்த பதாதைகளை கிழித்து எறிந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பாக டிடிவி தினகரன் மற்றும் அவரது கட்சியினர் மீது கமுதி காவல் நிலையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்து. அந்த புகாரின் அடிப்படையில் டிடிவி தினகரன் உள்ளிட்ட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், கமுதி வடக்கு ஒன்றிய துணை செயலாளர் மாரிமுத்து உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.