புதிய அமைச்சரவைக்கான புதிய அமைச்சர்கள் பதவியேற்று வரும் நிலையில் இன்றும் சில புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
அந்த வகையில் துமிந்த திஸாநாயக்க நீர்ப்பாசன, நீர்வழி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.அத்தோடு தயாசிறி ஜெயசேகர திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.