அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மாடுகளை வாகனத்தில் ஏற்றி சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ்பிரிவில், அனுமதிப்பத்திரம் இன்றி சட்டதிட்டங்களை மீறி மாடுகளை ஏற்றிச் சென்றதால் மாடுகளையும் அதனை ஏற்றிச் சென்ற வாகனம் மற்றும் சாரதி ஒருவரையும் பொலிஸார் இன்று முற்பகல் கைதுசெய்துள்ளனர்.
மழை பெய்துகொண்டிருப்பதால் பொலிஸார் தம்மை கவனிக்க மாட்டார்கள் எனும் நோக்குடன் மழை பெய்யும் நேரம் பார்த்து மேற்படி மாடுகள் காத்தான்குடி நோக்கி கொண்டுசெல்லப்பட்டபோது பொலிஸார் சோதனை நடத்தி கைது செய்துள்ளனர் எனவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தாம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.