6 மாதத்திற்குள் அனைத்தையும் மாற்ற தான் மெஜிக் வித்தகன் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த காலத்திற்குள் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் எனவும் பிரதமர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய அரசின் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் நிறைவேற்றப்படாவிட்டாலும் தேர்தல் ஒன்றை முன்னெடுப்பதே தனது இலக்கு எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கும், தேர்தலை வெற்றிகொள்வதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 5ம் திகதி பாராளுமன்றத்தை கூட்டினால் பெரிய பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற தேசிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்துடனான கலந்துரையாடலின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.