ஒத்திவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் தெரிவித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாராளுமன்றத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டதையடுத்து பாராளுமன்ற அமர்வுகளை நவம்பர் மாதம் 16 ஆம் திகதிவரை ஜனாதிபதி ஒத்திவைத்திருந்தார்.
இதையடுத்து நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடி நிலவி வந்தநிலையில் பாராளுமன்றத்தைக் கூட்டி ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு அரசியல் கட்சிகள் உட்பட சர்வதேசங்கள் பெரும் அழுந்தங்களை கொடுத்து வந்தன.
இதனையடுத்து நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து நாட்டின் நிலைமை மற்றும் சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்துரைந்த நிலையில், ஜனாதிபதி, பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் பரிசீலிக்கப்படுமென தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதியால் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள பாராளுன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 5 ஆம் திகதி கூடவுள்ளதாகவும் இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசுன தனக்கு அறிவித்துள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.