மத்திய மலை நாட்டில் பெய்யும் கடுமையான மழை காரணமாக, மொரஹாகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதாக திட்டப்பணிக் குழு தெரிவித்துள்ளது.
இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 65 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக பொதுமக்கள் தொடர்பு அதிகாரி பி.ஜி. தயானந்த தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டத்தின் அளவை கருத்தில் கொண்டு நாற்பத்தைந்து ஆயிரம் ஏக்கர் நெல் வயல்கள் நிலப்பரப்பில் பயிர்செய்வதற்காக நீர் பயன்படுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.