ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (01) ஒன்று கூடவுள்ளது.
கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய பிரதமர் நியமிக்கப்பட்டு தற்போதைய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் முதற் தடவையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஒன்று கூடவுள்ளது.
இதன் போது தற்போது நிலவும் அரசியல் நிலமை தொடர்பில் நீண்ட ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்க்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.