நான் ஐ.தே.க.யில் இருந்துகொண்டே மஹிந்த அரசாங்கத்தின் அமைச்சர்- வ. சேனாநாயக்க

238 0

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து இருக்கும் நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகித்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதாக வனஜீவராசிகள் மற்றும் சுற்றுலாத்துறை  அமைச்சர் வசந்த சேனாநாயக்க அறிவித்துள்ளார்.

அமைச்சுப் பொறுப்புக்களை நேற்று (31) சுற்றுலாத்துறை அமைச்சில் பொறுப்பேற்றுக் கொண்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நான் இன்னும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகவில்லை. தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவே இருக்கின்றேன். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி பெற்றுக் கொண்டமைக்காக என்னை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தோ அல்லது அதன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தோ விலக்க முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகாமல் இன்னுமொரு அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகிக்கும் முதல் நபர் நான் அல்ல. ஜயசூரியவும் முன்னொரு சந்தர்ப்பத்தில் நாட்டின் அவசியம் கருதி இவ்வாறு செய்திருந்தார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment