பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் நடாத்தப்பட்டும் தமிழியல் 2016 கான இளங்கலைமாணி பட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வில் 96 புள்ளிகள் பெற்று செல்வி பரமேஸ்வரன் சுசானி உலக சாதனை படைத்துள்ளார்.
திருவாளர்,திருவாட்டி பரமேஸ்வரன்,பரமேஸ்வரி இணையர்களின் மகளான சுசானி ஜேர்மனியில் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழியல் பட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வில் இதுவரை இந்தளவான தேர்வுப்புள்ளிகளை யாரும் பெற்றதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சுசானி, ஜேர்மன் போற்க்கன் தமிழாலயத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் தமிழைக் கற்றவர். ஜேர்மனிய மட்டத்தில் நடைபெற்ற தமிழ்மொழித் தேர்வுகளிலும் பலதடவைகள் முதல் மாணவராக வெற்றியீட்டிக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் ஆசிரியர் பணியினை மேற்கொள்வதே தனது வாழ்வின் உயரிய இலட்சியம் என்னும் நோக்கொடு, ஜேர்மனிய மொழியியலும், தமிழ்மொழியிலும் இளமானிப் பட்டப்படிப்புக்களைத் தொடர்ந்து கொண்டு வருகிறார்.
சுசானியை பிரான்சு தமிழ்சோலை தலைமைப் பணியகமும், அவரோடு பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களும், பல்கலைக்கழக பேராசியர்களும் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர்.