புதிய அரசாங்கத்தில் ஸ்ரீ ல.சு.க.யின் சிலர் அதிருப்தி- பசிலிடம் துமிந்த முறைப்பாடு

234 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று (31) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இரு கட்சிகளுக்கும் இடையில் காணப்பட்ட கருத்து முரண்பாடுகளை தீர்ப்பது குறித்து நீண்ட நேரம் இக்கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அவ்வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. கொழும்பிலுள்ள துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சிலர் அதிருப்தியுடன் காணப்படுவதாகவும் துமிந்த திஸாநாயக்க பசில் ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டுள்ளதாகவும்  அவ்வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

Leave a comment